< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
மும்பையில் நாளை ராகுல் காந்தி பாதயாத்திரை - மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
|16 March 2024 5:02 PM IST
மும்பையில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' நடத்தி வருகிறார். அவரது யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பையில் உள்ள சைத்திய பூமி எனப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவிடத்தில் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை நிறைவு செய்கிறார்.
தொடர்ந்து நாளைய தினம் ராகுல் காந்தி தலைமையில் 'நியாய சங்கல்ப பாதயாத்திரை' நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள மணி பவணில் இருந்து ஆகஸ்ட் கிராந்தி மைதான் பகுதி வரை பாதயாத்திரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு 'இந்தியா' கூட்டணி தலைவரக்ள் பங்கேற்க உள்ளனர்.