ராகுல்காந்தி பாதயாத்திரையில் பிரதமர் மோடியை விமர்சிப்பதே வேலை; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
|ராகுல்காந்தி பாதயாத்திரையில் பிரதமர் மோடியை விமர்சிப்பதே வேலை என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சோமநாதபுரா கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் எது என்பது தெரியும். குங்குமத்தை கண்டால் ஒதுங்கி நிற்கிறவர்கள் தேர்தல் வரும்போது நெற்றி முழுவதும் குங்குமம் வைத்து கொள்கிறார்கள். ராகுல்காந்தி சிவ பக்தர் என்று சொல்கிறார். உண்மையிலேயே அவர் சிவனின் பக்தராக இருந்தால் நல்லது தான். அது நாடகமாக இருக்க கூடாது. சிவ பக்தர் என்று சொல்கிறார்கள். ஆனால் ராமர் கோவில் கட்ட பிரதமராக மோடி வர வேண்டி இருந்தது.
ராகுல் காந்தி சிவ பக்தர் என்று சொல்லும் அளவுக்கு வந்துள்ளார் என்பது வரவேற்க வேண்டிய விஷயம். ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் மோடியை விமர்சிப்பதே வேலையாக கொண்டுள்ளார். இதை விடுத்தால் அந்த பாதயாத்திரையில் வேறு என்ன உள்ளது.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.