பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல - டெல்லி ஐகோர்ட்டு
|பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், பிரதமா் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசைத்திருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என்று விமர்சித்து பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல என்றும் ராகுலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவோ, இதுபோன்ற பேச்சுகளை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள், ராகுல்காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.