< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராகுல் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுகாங்கிரஸ் அறிவிப்பு
|24 March 2023 1:05 AM IST
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத்தில் உள்ள சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதையொட்டி, அந்தக் கட்சியின் தலைவர் கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " மோடி அரசு அமலாக்கத்துறை இயக்குனரகம், போலீசை அனுப்புகிறது. அரசியல் பேச்சுகள் தொடர்பாக வழக்குகளைப் போடுகிறது. நாங்கள் மேல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.