< Back
தேசிய செய்திகள்
பஜ்ரங் பூனியாவுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி: வைரலாகும் புகைப்படம்
தேசிய செய்திகள்

பஜ்ரங் பூனியாவுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி: வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
27 Dec 2023 5:12 PM IST

ராகுல் காந்தி, எங்களின் தினசரி நடவடிக்கைகளை பார்த்தார் என பஜ்ரங் பூனியா கூறினார்.

சண்டிகர்,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர், வீராங்கனைகள் பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளை திருப்பி தரும் நிலையில், அரியானா மாநிலம் சகாரா கிராமத்திற்கு இன்று காலை சென்ற ராகுல் காந்தி, பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.

அப்போது பஜ்ரங் பூனியாவுடன் ராகுல் காந்தி மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பஜ்ரங் பூனியா கூறுகையில், மல்யுத்த பயிற்சியை பார்வையிட ராகுல் வந்தார். மல்யுத்தத்திலும் ஈடுபட்ட ராகுல், எங்களின் தினசரி நடவடிக்கைகளை பார்த்தார். என்றார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சர்ச்சைகளுக்கிடையே மல்யுத்த வீரர்களுடனான ராகுல் காந்தியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்