< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி
|2 March 2024 10:41 AM IST
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்குகிறார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடை பயணத்தை முடித்துள்ளார். அதேவேளையில் கடந்த 5 நாட்கள் நடை பயணம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் 5 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு இன்று ராகுல் காந்தி நடை பயணத்தை மீண்டும் தொடங்குகிறார் என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 2 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து நடை பயணத்தை அவர் தொடங்குகிறார்.