< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் லாரி டிரைவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி-யூடியூப்பில் வீடியோ வெளியீடு
|30 May 2023 6:02 PM IST
ராகுல் காந்தி லாரி டிரைவர்களுக்கு மத்தியில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் திங்கட்கிழமை லாரியில் பயணம் மேற்கொண்டார். டிரைவர்களின் மனதில் உள்ள குறைகளை நேரில் தெரிந்துக் கொள்வதற்காக டெல்லியில் இருந்து சண்டிகர் வரை 6 மணி நேரம் பயணம் செய்தார்.
லாரி டிரைவர்களுக்கு மத்தியில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் லாரியில் பயணம் செய்தல், டிரைவர்களுடன் உரையாடுவது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். யூடியூப்பில் 8 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் விலை வாசி உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார்.