< Back
தேசிய செய்திகள்
தனக்கு முடி வெட்டிய சவர தொழிலாளிக்கு பரிசு அனுப்பிய ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

தனக்கு முடி வெட்டிய சவர தொழிலாளிக்கு பரிசு அனுப்பிய ராகுல் காந்தி

தினத்தந்தி
|
14 Sept 2024 1:30 AM IST

3 மாதத்துக்குப்பின் இந்த பரிசை ராகுல்காந்தி அனுப்பி வைத்திருப்பது சவர தொழிலாளிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரேபரேலி,

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த மே 13-ந்தேதி பிரசாரம் செய்த அவர், பின்னர் அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று முடி வெட்டிக்கொண்டார். அப்போது தனக்கு முடி வெட்டிய அந்த கடை உரிமையாளர் மிதுனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ பதிவுகளும் அப்போது வெளியாகி கவனம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு 2 நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை, இன்வெர்ட்டர் போன்றவற்றை ராகுல் காந்தி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

ராகுல் காந்திக்கு முடி வெட்டி 3 மாதத்துக்குப்பின் இந்த பரிசை அவர் அனுப்பி வைத்திருப்பது மிதுனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்