< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்

தினத்தந்தி
|
3 Dec 2022 2:55 PM IST

ராகுல் காந்தி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கிட்டதட்ட மூன்று மாதங்களாக அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை சென்று கொண்டிருக்கிறது.

இதனிடையே, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது. பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தி இந்த யாத்திரையில் பங்கேற்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் பிற மூத்த எம்.பிக்களான ஜெய்ராம் ரமேஷ், திக் விஜய் சிங் உள்ளிட்ட கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்