< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமிர்தசரஸ் பொற்கோவிலில் 2-வது நாளாக சேவையாற்றிய ராகுல் காந்தி..!
|3 Oct 2023 2:32 PM IST
அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராகுல் காந்தி 2-வது நாளாக சேவையாற்றினார்.
அமிர்தசரஸ்,
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனிப்பட்ட பயணமாக பஞ்சாப் சென்றார். அங்கு அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் அவர் வழிபாடு செய்தார்.
அதனை தொடர்ந்து அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார். இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று பொற்கோவிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பல்லக்குத் தூக்கும் நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தார்.
இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணம் என்பதால் அவரை சந்திக்க பிற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.