< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி புத்திசாலி: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி புத்திசாலி: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

தினத்தந்தி
|
19 Jan 2023 11:56 AM IST

ராகுல் காந்தி பப்பு அல்ல. அவரை பற்றிய பிம்பம் துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று காஷ்மீரில் முடிவடைய உள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கட்சியினர் மட்டும் இன்றி பல்வேறு துறை பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம், ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரகுராம் ராஜன் அளித்த பதில் வருமாறு: -

ராகுல் காந்தி பப்பு அல்ல. அவரை பற்றிய பிம்பம் துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு புத்திச்சாலி, இளைஞர், ஆர்வமுள்ள மனிதர். முன்னுரிமைகள் என்ன, அடிப்படை அபாயங்கள் மற்றும் அவற்றை மதிப்பிடும் திறன் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தி அதை செய்யக்கூடிய திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்