நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி
|ஜி.எஸ்.டி. உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
புதுடெல்லி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது.
இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மக்களவையில் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கை அருகே வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஜி.எஸ்.டி. உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இளைஞர் காங்கிரசின் ஸ்ரீனிவாஸ் பிவி செய்த டுவிட்டில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரு பெரிய பேனரை வைத்திருப்பதை காணலாம்.