< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு இல்லை:  துணை ராணுவம் விளக்கம்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு இல்லை: துணை ராணுவம் விளக்கம்

தினத்தந்தி
|
29 Dec 2022 11:16 AM IST

ராகுல் காந்தி பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று துணை ராணுவப்படை விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவரது யாத்திரை டெல்லிக்கு வந்துள்ளது.இதனிடையே, ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலளித்துள்ள துணை ராணுவப்படி, ராகுல் காந்தியின் பாதுகப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்க்ளில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகவும் இது தொடர்பாக அவ்வப்போது ராகுல் காந்தி தரப்பிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்