< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேதார்நாத் கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்
|6 Nov 2023 8:24 AM IST
கோவிலுக்கு வந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கேதார்நாத்,
கேதார்நாத் கோவிலில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேதார்நாத் கோவிலில் நடந்த மாலை ஆரத்தியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகவும் இந்த கேதார்நாத் கோவில் விளங்குகிறது.