< Back
தேசிய செய்திகள்
அரையிறுதியில் வெற்றி: இந்திய அணிக்கு ராகுல்காந்தி வாழ்த்து
தேசிய செய்திகள்

அரையிறுதியில் வெற்றி: இந்திய அணிக்கு ராகுல்காந்தி வாழ்த்து

தினத்தந்தி
|
16 Nov 2023 8:50 AM IST

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

"அணியின் கூட்டு முயற்சி, திறமையுடன் விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஷமியின் நிலையான ஆட்டம் உலகக்கோப்பையில் அவரை சிறந்த வீரராக்கியுள்ளது. விராட் கோலியின் அற்புதமான சாதனைக்கு வாழ்த்துக்கள். கோப்பையை வென்று வாருங்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்