< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் ராகுல்காந்தி 21 நாட்கள் நடைபயணம்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் ராகுல்காந்தி 21 நாட்கள் நடைபயணம்

தினத்தந்தி
|
8 Aug 2022 9:22 PM IST

ராஜீவ்காந்தி கர்நாடகத்தில் ௨௧ நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

பெங்களூரு:

மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் மொத்தம் 3,500 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் கர்நாடகத்தில் அவர் 511 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தி மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் இருந்து தொடங்கி 8 மாவட்டங்கள் வழியாக தெலுங்கானா செல்கிறார். அவர் மொத்தம் 21 நாட்கள் கா்நாடகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடை பயணத்தின்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளை எடுத்து கூற உள்ளார்.


8 மாவட்டங்கள், 7 நாடாளுமன்ற தொகுதிகள், 21 சட்டமன்ற தொகுதிகளில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். ராய்ச்சூரில் அவரது பயணம் நிறைவடைகிறது. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் ராகுல் காந்தியின் நடை பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்