< Back
தேசிய செய்திகள்
அசாமில் எதிர்ப்பு : பாஜக தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல்
தேசிய செய்திகள்

அசாமில் எதிர்ப்பு : பாஜக தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல்

தினத்தந்தி
|
21 Jan 2024 8:21 PM IST

அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

கவுகாத்தி,

ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 25-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய இந்திய ஒற்றுமை நீதி பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம். மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

உடனடியாக பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பஸ்சில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல்காந்தி " அன்பிற்கான கடை எல்லோருக்காவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும் இந்துஸ்தான் வெல்லும் என இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்