இன்ஸ்டாகிராமில் நடிகை ராதிகா பண்டிட் கருத்து
|‘உலகிலேயே பாதுகாப்பான டிரைவர் என் அப்பா தான்’ என்று இன்ஸ்டாகிராமில் நடிகை ராதிகா பண்டிட் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா பண்டிட். இவரும், பிரபல நடிகர் யஷ்சும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை ராதிகா பண்டிட் கைவிட்டார். தற்போது அவர் குடும்பத்தை கவனித்து வருகிறார். ராதிகா பண்டிட் கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக மாற அவரது தந்தையும், தாயும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை ராதிகா பண்டிட், தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, 'உலகத்திலேயே பாதுகாப்பான டிரைவர் எனது அப்பா தான். அவர் ஓட்டும்போது என்னால் உண்மையில் தூங்க முடியும். என் வாழ்நாள் முழுவதும் அவர் என்னை பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஸ்கூட்டரில் அழைத்து வந்தார். வார இறுதியில் இந்த ஸ்கூட்டர் தான் முழு வீடாக இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க தான் ஹெல்மெட் அணியாமல் உள்ளோம் என்றும், நீங்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.