< Back
தேசிய செய்திகள்
காங்கிரசில் இருந்து விலகிய ராதிகா கேரா பா.ஜ.க.வில் இணைந்தார்
தேசிய செய்திகள்

காங்கிரசில் இருந்து விலகிய ராதிகா கேரா பா.ஜ.க.வில் இணைந்தார்

தினத்தந்தி
|
7 May 2024 2:06 PM IST

காங்கிரசில் இருந்து நேற்று முன்தினம் விலகிய ராதிகா கேரா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

புதுடெல்லி,

சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரும், கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளருமான ராதிகா கேரா, கட்சியில் இருந்து நேற்று முன்தினம் விலகினார். கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வெளியேறினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் ராதிகா கேரா இன்று அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

"ராம பக்தையான நான் ராமர் கோவிலில் தரிசனம் செய்ததற்காக கவுசல்யா தேவியின் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டனர். பா.ஜ.க. அரசு, மோடி அரசும் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் என்னால் இங்கு வந்திருக்க முடியாது. இன்றைய காங்கிரஸ் மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல, இது ராமருக்கு எதிரானது, இந்து மதத்தினருக்கு எதிரான காங்கிரஸ்". இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்