< Back
தேசிய செய்திகள்
குதுப்மினாரில் ஒளிர்ந்த ருவாண்டா நாட்டு கொடி வர்ணம் - பயங்கரவாத நினைவு தினம் அனுசரிப்பு
தேசிய செய்திகள்

குதுப்மினாரில் ஒளிர்ந்த ருவாண்டா நாட்டு கொடி வர்ணம் - பயங்கரவாத நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
8 April 2024 11:11 PM GMT

பயங்கரவாத நினைவுநாளில் டெல்லியில் உள்ள குதுப்மினாரில் ருவாண்டா நாட்டு கொடியின் வர்ணங்கள் ஒளிரச்செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ருவாண்டா நாட்டின் தலைநகர் கிகாலியில் கடந்த 1994-ம் ஆண்டு 100 நாள் நடைபெற்ற உள்நாட்டு பயங்கரவாதத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. ருவாண்டா நாடு ஆப்பிரிக்க ஒன்றியத்தில் உள்ள ஒரு நாடு ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்றியத்தின் மீது இந்தியா நல் அபிப்ராயம் கொண்டுள்ளது.

இதனால் ருவாண்டா மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்பதை பயங்கரவாத நினைவுநாளில் எடுத்துக்காட்டியது. அதாவது டெல்லியில் உள்ள குதுப்மினாரில் ருவாண்டா நாட்டு கொடியின் வர்ணங்கள் ஒளிரச்செய்யப்பட்டது. லேசர் ஒளிக்கற்றைகளால் சுமார் ஒருமணி நேரம் குதுப்மினார் ஒளிர்ந்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதைப்போல கிகாலியில் நடைபெற்ற நினைவுதின நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (பொருளாதார உறவுகள்) தம்மு ரவி கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்