< Back
தேசிய செய்திகள்
இங்கிலாந்து ராணி கமிலா, பெங்களூரு வருகை
தேசிய செய்திகள்

இங்கிலாந்து ராணி கமிலா, பெங்களூரு வருகை

தினத்தந்தி
|
24 Oct 2022 6:45 PM GMT

பெங்களூருவில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து ராணி கமிலா வந்துள்ளார். 10 நாட்கள் பெங்களூருவில் தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். ராணி ஆன பின்பு அவரது முதல் பயணம் இதுவாகும்.

பெங்களூரு:

பெங்களூருவில், இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து நாட்டின் இளவரசராக இருந்து வருபவர் சார்லஸ். இவரது மனைவியும், இங்கிலாந்து நாட்டின் ராணியாகவும் இருந்து வருபவர் கமிலா. இவருக்கு 75 வயதாகிறது. இந்த நிலையில், ராணி கமிலா ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார். அவருடன் தோழிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் பெங்களூருவுக்கு வந்துள்ளனர்.

ராணி கமிலா, இதற்கு முன்பு 7 முறை பெங்களூருவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் ராணியாக பதவி ஏற்ற பின்பு முதல் பயணமாக பெங்களூருவுக்கு வந்துள்ளார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையம் உள்ளது. அந்த மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக ராணி கமிலா வந்திருப்பது தெரியவந்துள்ளது.

அழகுக்கான ஆயுர்வேத சிகிச்சை

அதாவது தன்னை அழகுப்படுத்தி கொள்வதற்காக ஒயிட்பீல்டில் உள்ள ஆயுர்வேத மையத்தில் ராணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் 10 நாட்கள் ஆயுர்வேத மையத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகிறார். இது அவரது தனிப்பட்ட பயணமாகும். இதன் காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை. மேலும் பொதுமக்களும் அவரை சந்திக்க அனுமதி கிடையாது. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்தே ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் ராணி கமிலா தொடர்பில் இருந்து வருவதாகவும், ஏற்கனவே 7 முறை இந்த மையத்திற்கு வந்திருப்பதாகவும், தற்போது 8-வது முறையாக சிகிச்சை பெற வந்திருப்பதாகவும் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் தலைவர் ஐசாக் மதாய் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்