< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
|16 Sept 2022 10:36 AM IST
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 21-ம் தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம், 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இந்த 5 நாட்களிலும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.