< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் டூ டெல்லி! - பிரபல யூடியூபரை காண 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..!
தேசிய செய்திகள்

பஞ்சாப் டூ டெல்லி! - பிரபல யூடியூபரை காண 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..!

தினத்தந்தி
|
8 Oct 2022 8:59 PM IST

யூ டியூபரை சந்திக்கும் ஆர்வத்தில் காணாமல் போன 13 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தனக்கு மிகவும் பிடித்த யூ டியூபரான நிச்சய் மல்ஹான்-ஐ சந்திக்கும் நோக்கில் வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.

சிறுவன் காணாமல் போனது குறித்து தகவல் தெரிந்ததும், துபாய் சென்றிருந்த யூ டியூபர் நிச்சய் மல்ஹான், சிறுவன் குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து 3 நாட்களாக 250 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து டெல்லி சென்ற சிறுவனை பெற்றோரின் புகாரின் அடிப்படையில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்