< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்: அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் டிரோன் கண்டெடுப்பு
|7 Jun 2024 9:23 PM IST
அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்ததை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து அந்த டிரோன், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோகா என்ற கிராமத்திற்கு அருகே விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடைந்த நிலையில் கிடந்த அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அது 'ஹெக்சாகாப்டர்' எனப்படும் டிரோன் கருவி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் போதைப்பொருள் உள்ளிட்டவற்றை கடத்துவதற்காக டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.