< Back
தேசிய செய்திகள்
வீடியோ காலில் இளம்பெண்ணிடம் நிர்வாணமாக நின்று பேசி சர்ச்சையில் சிக்கிய ஆம் ஆத்மி மந்திரி
தேசிய செய்திகள்

வீடியோ காலில் இளம்பெண்ணிடம் நிர்வாணமாக நின்று பேசி சர்ச்சையில் சிக்கிய ஆம் ஆத்மி மந்திரி

தினத்தந்தி
|
28 May 2024 8:39 PM IST

இளம்பெண்ணிடம் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று ஆபாசமாக பேசிய ஆம் ஆத்மி மந்திரி தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி செய்கிறது. அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான பால்கர் சிங் பஞ்சாப் மந்திரிசபையில் மந்திரியாக உள்ளார்.

இந்நிலையில், மந்திரி பால்கர் சிங் செல்போன் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இளம்பெண் மந்திரி பால்கர் சிங்கிடம் வேலை கேட்டுள்ளார். ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி மந்திரி பால்கர் சிங் வீடியோ காலில் இளம்பெண்ணை தொடர்புகொண்டு ஆடையை கழற்றுமாறு கூறி நிர்வாணமாக பாலியல் ரீதியிலான செயலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் ஆம் ஆத்மி மந்திரி பால்கர் சிங்கை கைது செய்து இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி பஞ்சாப் போலீசாருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலை கேட்ட பெண்ணிடம் ஆம் ஆத்மி மந்திரி வீடியோ காலில் நிர்வாணமாக நின்று ஆபாசமாக பேசிய வீடியோ பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்