< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் நபரை 4 இளம்பெண்கள் காரில் கடத்தி, பலாத்காரம்; அதிர்ச்சி தகவல்
தேசிய செய்திகள்

பஞ்சாப் நபரை 4 இளம்பெண்கள் காரில் கடத்தி, பலாத்காரம்; அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
23 Nov 2022 8:49 PM IST

பஞ்சாப்பில் வசதியான 4 இளம்பெண்கள் தன்னை காரில் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர் என நபர் ஒருவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.



ஜலந்தர்,


பஞ்சாப்பில் ஜலந்தர் நகரில் கபுர்தலா சாலையில் நபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவில் பணி முடிந்து நடந்து சென்றுள்ளார். தோல் தொழிற்சாலையில் பணிபுரிபவரான அவரை நோக்கி வெள்ளை நிறத்தில் கார் ஒன்று நெருங்கி வந்துள்ளது.

அதில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் காரை ஓட்டி வந்த இளம்பெண், அந்த நபரிடம் ஒரு துண்டு சீட்டை படிக்க கொடுத்து, முகவரி விவரம் கேட்டுள்ளார்.

அவர் அதனை வாங்கி படித்து கொண்டிருக்கும்போது, ரசாயனம் போன்ற ஏதோ ஒன்றை அவரது கண்களில் இளம்பெண் ஸ்பிரே செய்துள்ளார். இதனால், பார்வை தெரியாத நிலைக்கு சென்றதுடன் மயக்கமும் அடைந்துள்ளார்.

அவர் திரும்பி சுயநினைவு வந்து பார்க்கும்போது, காரில் அமர்ந்து இருப்பது தெரிந்துள்ளது. அவரின் கண்களை கட்டியுள்ளனர். கைகளை பின்னால் கட்டியுள்ளனர். சுற்றி பெண்கள் இருந்துள்ளனர். அவரை வன பகுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.

அவர்கள் நன்றாக மது அருந்தி இருந்துள்ளனர். அந்த நபரையும் குடிக்க செய்துள்ளனர். இதன் பின்னர், பரஸ்பர போதை நிலையிலேயே 4 இளம்பெண்களும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன்பின்பு அடுத்த நாள் அதிகாலை (நேற்று) 3 மணியளவில் அவரது கைகளை கட்டி போட்டு, கண்ணையும் கட்டி விட்டு ஏதோ ஓரிடத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.

அவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும் தன்னிடம் பஞ்சாபியில் பேசினர் என்று அவர் தெரிவித்து உள்ளார். அவருக்கு திருமணம் நடந்து குழந்தைகளும் உள்ளனர்.

எனினும், நடந்த சம்பவம் பற்றி அவர் போலீசில் புகாராக எதுவும் தெரிவிக்கவில்லை. செய்தி ஊடகங்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார் தாமாக முன்வந்து யாரந்த இளம்பெண்கள் என தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்