< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்:  குடும்ப தகராறில் 3வது மனைவி, உறவினர்கள் சுட்டு கொலை; கணவர் வெறிச்செயல்
தேசிய செய்திகள்

பஞ்சாப்: குடும்ப தகராறில் 3வது மனைவி, உறவினர்கள் சுட்டு கொலை; கணவர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
31 May 2022 2:55 PM IST

பஞ்சாப்பில் குடும்ப தகராறில் 3வது மனைவி மற்றும் அவரது பெற்றோரை சுட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜலந்தர்,

பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் ஷிவ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுனில். முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்து விட்ட சுனில், 3 ஆண்டுகளுக்கு முன் ஷில்பி என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது மாமனார் அசோக் குமார் மற்றும் மாமியார் கிருஷ்ணா ஆகியோரை தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.

தம்பதிக்கு இடையேயான விவகாரம் பற்றி பேசி தீர்த்து கொள்ள முயன்றபோது, ஆத்திரமடைந்த சுனில் கைத்துப்பாக்கியால் தனது மனைவி ஷில்பியை முதலில் சுட்டு கொன்றார். அப்போதும் ஆத்திரம் தீராத அவர், ஷில்பியின் பெற்றோரையும் சுட்டு கொன்றுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சுனிலை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 3வது மனைவி மற்றும் அவரது பெற்றோரை கணவர் சுட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்