< Back
தேசிய செய்திகள்
பஞ்சாபில் இன்று முதல் 300 யூனிட் இலவச மின்சாரம்; பகவந்த் மன் அறிவிப்பு
தேசிய செய்திகள்

பஞ்சாபில் இன்று முதல் 300 யூனிட் இலவச மின்சாரம்; பகவந்த் மன் அறிவிப்பு

தினத்தந்தி
|
1 July 2022 9:25 AM GMT

பஞ்சாபில் இன்று முதல் ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று அம்மாநில முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான பகவந்த் மன் பொறுப்பேற்றார். இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்