< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்: சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
|2 Jun 2024 12:31 PM IST
ரெயில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம், சிர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ரெயிலின் லோகோ பைலட்டுகள் இருவரும் படுகாயமடைந்தனர் .அவர்கள் ஸ்ரீ பதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ரெயில்வே போலீஸ் அதிகாரி கூறுகையில் ,
அதிகாலை 3:45 மணியளவில், சரக்கு ரெயில்கள் மோதி விபத்து நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்றோம் . அப்போது இரண்டு லோகோ பைலட்டுகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. என தெரிவித்தார்.