< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடித்த பஞ்சாப் மந்திரி
|26 March 2023 4:27 AM IST
ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடித்த பஞ்சாப் மந்திரி திருமணம் குருத்வாராவில் நடந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். 32 வயதான ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடந்தது. அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜோதி யாதவ் தற்போது பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.