< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் முதல் மந்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது- முதல் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல் மந்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது- முதல் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி

தினத்தந்தி
|
28 March 2024 4:25 PM IST

பகவந்த் மான் தன் முதல் மனைவி இந்தர்பிரீத் கவுரை பிரிந்தபின், 2022ல் குர்பிரீத் கவுரை மணந்தார்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநில முதல் மந்திரி பகவந்த் மான்-குர்பிரீத் கவுர் தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த பகவந்த் மான், எல்லாம் வல்ல கடவுள் தனக்கு ஒரு மகளை பரிசாக கொடுத்திருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில், குழந்தையின் முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பகவந்த் மானின் முதல் மனைவியின் பெயர் இந்தர்பிரீத் கவுர். ஒரு மகன், ஒரு மகள் பிறந்த நிலையில், 2015-ல் இருவரும் பிரிந்தனர். அதன்பின் 2022-ல் குர்பிரீத் கவுரை பகவந்த் மான் மணந்தார்.

பகவந்த் மான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, காமெடியன், பாடகர் மற்றும் நடிகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்