< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் முதல்-மந்திரிக்கு இன்று திருமணம் - டாக்டரை மணக்கிறார்
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்-மந்திரிக்கு இன்று திருமணம் - டாக்டரை மணக்கிறார்

தினத்தந்தி
|
7 July 2022 6:30 AM IST

குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை சண்டிகாரில் இன்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மணக்கிறார்.

சண்டிகார்,

நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, இப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி, சீரத், தில்ஷன் என 2 குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர்.

தற்போது இந்தர்பிரீத் கவுர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். இந்த நிலையில் பகவந்த் மானுக்கு 2-வது திருமணத்துக்கு அவரது தாயார் ஹர்பால் கவுரும், சகோதரி மான்பிரீத் கவுரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை சண்டிகாரில் இன்று பகவந்த் மான் மணக்கிறார். மணவிழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியோ ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளதாக சண்டிகாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்