< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்
|3 Feb 2023 10:47 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் பகுதியில் பாகிஸ்தான் எல்லை அருகே டிரோன் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், அந்த டிரோனை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர்.
அந்த டிரோன் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. பின்னர் அந்த டிரோனை சோதனை செய்த போது, அதில் வணிக ரீதியிலான கடத்தல் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.