< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது - எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது - எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி

தினத்தந்தி
|
27 Feb 2023 5:02 AM IST

பஞ்சாப்பில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் செக்டாரில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நேற்று அதிகாலையில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை வீரர்கள் கண்டுபிடித்தனர். ஷாஜதா கிராமப்பகுதியை நோக்கி வந்த அந்த டிரோனை வீரர்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தினர்.

பின்னர் அந்த பகுதியை சுற்றி வளைத்த வீரர்கள், டிரோனின் பாகங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பஞ்சாப் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்