< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்: ஏ.டி.எம்-ஐ உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
|6 July 2024 4:07 PM IST
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் பக்வாரா- பலாஹி சாலையில் பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம். அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் சுமார் ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளையர்கள், பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். கேஸ் கட்டரின் மூலமாக ஏ.டி.எம்.மை உடைக்கும்போது வெப்பம் காரணமாக ஏ.டி.எம்.மில் சில கரன்சி நோட்டுகள் எரிந்துள்ளது. அந்த பணத்தை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுவிட்டு மற்ற பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.