< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே 13 கிலோ போதைப்பொருளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை
|11 Oct 2024 5:57 AM IST
பாகிஸ்தான் எல்லை அருகே 13 கிலோ போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், நேற்று மதியம் 12.40 மணியளவில் அங்குள்ள வயல்வெளியில் 6 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13.160 கிலோ போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மேலும், நேற்றைய தினம் காவல்துறையினருடன், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் கண்டெடுக்கப்பட்டது. இந்த டிரோன் போதைப்பொருளை கடத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.