< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதல்-மந்திரிதான் வேந்தர் - சட்டசபையில் மசோதா நிறைவேறியது
|21 Jun 2023 1:22 AM IST
பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், ஆம் ஆத்மி அரசுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில், பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று அந்த மசோதா மீது சிறிது நேரம் விவாதம் நடந்தது. பின்னர், ஓட்டெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி மட்டுமின்றி, அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் அதை ஆதரித்தன.