திடீர் பள்ளம் நொடிப்பொழுதில் கவிழ்ந்த டேங்கர் லாரி...பரபரப்பு வீடியோ
|சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புனே,
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சமாதான் சவுக் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியின் பின்புறம் தலைகீழாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. டேங்கர் லாரியில் இருந்து டிரைவர் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை மீட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் பள்ளத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.