< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று தொடக்கம்
|17 Sept 2022 5:57 AM IST
இன்று முதல் 21-ந்தேதி வரை சபரிமலையில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி நேற்றைய தினம் கோவில் நடையை திறந்து மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபாராதணை காட்டினார்.
தொடர்ந்து இன்று முதல் வரும் 21-ந்தேதி வரை சபரிமலையில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து வரும் 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.