< Back
தேசிய செய்திகள்
சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பயிற்சியை நிறுத்தி மாநில அரசு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பயிற்சியை நிறுத்தி மாநில அரசு உத்தரவு

தினத்தந்தி
|
16 July 2024 8:30 PM IST

போலி மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக பூஜா கெட்கரின் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயில் பயிற்சி உதவி கலெக்டராக இருந்தவர் பூஜா கேட்கர். பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தனியறை, உதவியாளர், காருக்கு வி.ஐ.பி. எண் போன்ற வசதிகள் கேட்டு அடம்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது எழுந்த புகாரை அடுத்து பூஜா கேட்கர் வாசிமுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாகவும் புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்துள்ள மராட்டிய மாநில அரசு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக முசோரி வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வரும் 23ம் தேதிக்குள் முசோரியில் உள்ள பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து அவரை மாநில அரசு விடுவித்து உள்ளது.

மேலும் செய்திகள்