< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா
|10 Oct 2023 2:50 PM IST
புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல்-மந்திரி ரங்கசாமி உட்பட 4 மந்திரிகள் உள்ளனர். அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்தார்.
இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம்,வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன. இந்த நிலையில் மந்திரி சந்திர பிரியங்கா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்ததால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.