புதுச்சேரி: மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வயநாடு,
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், மீட்புப்பணிகள் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தசூழலில் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோழிக்கோடு அருகில் உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஆக. 1 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மாஹே மண்டல நிர்வாகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.