நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி
|9-வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
புதுச்சேரி,
இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள், 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதையடுத்து, நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 9-வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள், நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணிக்கிறார்.