< Back
தேசிய செய்திகள்
மீண்டும் தொடங்கிய புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மீண்டும் தொடங்கிய புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை

தினத்தந்தி
|
20 Feb 2023 12:29 AM IST

புதுச்சேரி-பெங்களூரு இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியது.

புதுச்சேரி,

புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமான சேவை நடந்து வருகிறது. அதாவது நாள்தோறும் பகல் 11.55 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு நண்பகல் 1.35 மணிக்கு வந்தடைகிறது. புதுவையில் இருந்து அதே விமானம் 1.55 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 3.20 மணிக்கு புறப்படும் விமானம் 4.15 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது. மாலை 4.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு 6.20 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி-பெங்களூரு இடையே விமான சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்தநிலையில் புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியது.

மேலும் செய்திகள்