< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரி: ஜி20 மாநாடு ஏற்பாடுகள் தீவிரம் - 5 இடங்களில் 144 தடை
|29 Jan 2023 1:52 AM IST
புதுச்சேரியில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதனால் 5 இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) ஜி20 மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளில் புதுவை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், ஜி20மாநாடு நடக்கும் சுகன்யா கன்வென்சன் சென்டர், புதுச்சேரி விமான நிலையம், மாநாட்டு பிரதிநிதிகள் தங்கும் அக்கார்டு ஓட்டல், தி ரெசிடன்சி ஓட்டல், ரேடிசன் ஓட்டல் ஆகிய 5 பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.