< Back
தேசிய செய்திகள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு
தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு

தினத்தந்தி
|
27 July 2022 10:11 PM IST

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

சாதனை விளக்க மாநாடு

கர்நாடக முதல்-மந்திரியாக பணியாற்றிய எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்து இன்று(வியாழக்கிழமை) 2-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு பசவராஜ் பொம்மையின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு தொட்டப்பள்ளாபுராவில் நடக்கிறது. பெங்களூருவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொட்டபள்ளாப்புராவில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்ட ஏற்பாடுகள்

இந்த மாநாட்டில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மாநாட்டில் பசவராஜ் பொம்மையின் சாதனைகள் குறித்த கையேடு வெளியிடப்படுகிறது. இந்த சாதனைகள் குறித்து தலைவர்கள் விளக்கி பேச உள்ளனர். இந்த மாநாட்டிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சாதனை விளக்க மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதே போன்ற சாதனை விளக்க மாநாடுகளை மாநிலம் முழுவதும் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்