< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதியில்லை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதியில்லை

தினத்தந்தி
|
1 Sept 2023 6:55 AM IST

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

உலகில் மிக அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்று ஜி20. இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி மாளிகைக்கு இன்று முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி இல்லம் அறிவித்து உள்ளது. 10-ம் தேதிக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜி20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்