< Back
தேசிய செய்திகள்
தெரு மின்விளக்குகளை சீரமைக்க கோரி  பொதுமக்கள் கோரிக்கை
தேசிய செய்திகள்

தெரு மின்விளக்குகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
25 Sept 2023 12:15 AM IST

கோலார் கில்பர்ட்ஸ் சர்க்கிளில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரையுள்ள சாலைகளில் தெரு மின்விளக்குகளை சீரமைக்க கோரியும், முட்புதர்களை அகற்ற கோரியும் சி.ஐ.டி.யு ஆட்டோ சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

தெரு மின்விளக்குகள் சீரமைப்பு

கோலார் மாவட்டம் மாரிக்குப்பத்தை அடுத்த கில்பர்ட்ஸ் சர்க்கிள் பகுதியில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை சாலைகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது இரவு நேரங்களில் தெரு மின்விளக்குகள் சரியாக ஒளிராததால் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு தெரு மின்விளக்குகள் மட்டுமின்றி, சாலையோரம் குவிந்து கிடக்கும் முட்புதர்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முட்புதர்களில் இருந்து வெளியேறும் பாம்புகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதுடன், வீடுகளுக்குள்ளும் புகுந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலார் தங்கவயல் பகுதியில் சில இடங்களில் தெரு மின்விளக்குகள் ஒளிருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.ஐ.டி.யு சங்கப் பிரிவை சேர்ந்த ஆட்டோ சங்க நிர்வாகிகள் தெரு மின்விளக்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் நகரசபை நிர்வாக அதிகாரிகள், பெஸ்காம் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து கோலார் தங்கவயல் தொகுதியில் சில இடங்களில் தெரு மின்விளக்குகள் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்தநிலையில் மாரிகுப்பத்தை அடுத்த கில்பர்ட்ஸ் சர்க்கிளில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை உள்ள தெரு விளக்குகளை சீரமைக்கவேண்டும் என்று சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் தங்கராஜ், பெஸ்காம் அதிகாரி ஹேமலதா, நகரசபை கமிஷனர் பவன்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது இதுவரை மேற்கொண்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நன்றியை தெரிவித்த அவர்கள் புதிய கோரிக்கையை முன் வைத்தனர்.

அதன்படி கில்பர்ட்ஸ் சர்க்கிளில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை சாலையோரம் உள்ள முட்புதர்களை அகற்றவேண்டும்.

மேலும் தெரு விளக்குகளை சீரமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை கேட்ட கவுன்சிலர், நகரசபை தலைவர் பவன் குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்