மின் துண்டிப்பு குறித்து 'வாட்ஸ்-அப்' மூலம் புகார் தெரிவிக்கலாம்
|பெஸ்காம் எல்லையில் மின் துண்டிப்பு குறித்து வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு
பெஸ்காம் எல்லையில் மின் துண்டிப்பு குறித்து வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மின் துண்டிப்பு
மழை காலம் மற்றும் அவசர நேரங்களில் மின் துண்டிப்பு உள்பட மின் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க 1912 என்ற எண்ணில் உதவி மையம் செயல்படுகிறது. இது தவிர பொதுமக்கள் மின் துண்டிப்பு குறித்து 'வாட்ஸ்-அப்' எண் மூலம் புகார் தெரிவிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மின் வினியோக நிறுவன (பெஸ்காம்) எல்லைக்குள் 8 மாவட்டங்கள் உள்ளன. இந்த 8 மாவட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர், வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். பெங்களூரு நகர மாவட்டத்தில் தெற்கு மண்டலம் 82778-84011, மேற்கு மண்டலம் 82778-84012, கிழக்கு மண்டலம் 82778-84013, வடக்கு மண்டலம் 82778-84014 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார்களை அனுப்பலாம்.
நுகர்வோர் குறைதீர் பிரிவு
கோலார் மாவட்டம் 82778-84015, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் 82778-84016, பெங்களூரு புறநகர் மாவட்டம் 82778-84017, ராமநகர் மாவட்டம் 82778-84018, துமகூரு மாவட்டம் 82778-84019, சித்ரதுர்கா மாவட்டம் 82778-84020, தாவணகெரே மாவட்டம் 82778-84021 ஆகிய வாட்ஸ்-அப் எண்ணில் புகார்களை அனுப்பலாம். மின் பிரச்சினை குறித்து புகார்களை அனுப்பியதும், அந்த புகார்கள் மின் நுகர்வோர் குறை தீர் பிரிவுக்கு சென்றுவிடும். அவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல மின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள். வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி வரும் நாட்களில் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.