< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாளை விண்ணில் சீறிப்பாயும் பி.எஸ்.எல்.வி.ராக்கெட்: திருப்பதியில் மாதிரியை வைத்து சிறப்பு பூஜை
|25 Nov 2022 1:26 PM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
திருப்பதி,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது.
இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டின் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். விஞ்ஞானிகளுக்கு மேல தாளங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் மற்றும் லட்டு ஆகியவை வழங்கப்பட்டது.